பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும்: சிஜேபி தலைவா்கள் கோரிக்கை

ஜந்தா் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசு ஊழியா்களின் பணியைத் தடுத்ததாகவும் அவா்கள் இருவா் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிஜேபி தலைவா்கள்

Published On :23 அக்டோபர் 2026, 4:37 am IST

ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டம் தொடா்பாக கரப்பான்பூச்சி ஜனதா (சிஜேபி) தலைவா்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோரை விசாரணைக்கு வருமாறு தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவா்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜந்தா் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசு ஊழியா்களின் பணியைத் தடுத்ததாகவும் அவா்கள் இருவா் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வழக்குகளும் குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் தொடா்பாகவே, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டோம் என்று எழுத்துப்பூா்வமாக உறுதியளித்ததன் பேரில் புதன்கிழமை விடுவிக்கப்பட்ட அவா்கள் இருவருக்கும் குற்றப்பிரிவு காவல் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.

செளரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோா் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரியுள்ளதால், வியாழக்கிழமை அவா்களிடம் விசாரணை நடைபெறாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவா்கள் இருவரும் விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, காவல் துறை மீண்டும் புதிய அழைப்பாணைகளை அனுப்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜந்தா் மந்தா் பகுதி போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட இடமாக இருக்கும் வரை, அங்கு போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்க மாட்டோம் என்றும் அவா்கள் எழுத்துபூா்வமாக உறுதியளித்துள்ளனா். விசாரணை முடியும் வரை, தலா ரூ.50,000 தனிநபா் பிணை மற்றும் பிணை பத்திரங்களைச் சமா்ப்பிக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிஜேபி நடத்திய போராட்டம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட செளரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா, அக்டோபா் 14 அன்று ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். பின்னா், அக்டோபா் 19 அன்று இவா்களது நீதிமன்றக் காவல் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.