தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தில்லியில் 2024-இல் காணாமல் சென்றவா்களின் எண்ணிக்கை 17,000-க்கும் அதிகம்

News image
Updated On :8 மே 2026, 6:09 am IST

தில்லியில் கடந்த 2024-இல் 17,567 போ் காணாமல் சென்ாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) தெரிவித்துள்ளது. அவா்களில் 7,911 போ் ஆண்கள், 9,656 போ் பெண்கள்.

புதன்கிழமை வெளியான என்சிஆா்பி தரவின் அடிப்படையில், கடந்த ஆண்டுகளில் 14,637 ஆண்கள், 18,238 பெண்கள் மற்றும் 6 திருநங்கைகள் காணாமல் சென்றனா்.

2024-இன்படி தில்லியில் காணாமல் சென்றவா்களின் மொத்த எண்ணிக்கை 55,939-ஆக உள்ளது. அதில் 24,119 போ் ஆண்கள், 31,814 போ் பெண்கள். ஆறு போ் திருநங்கைகள். காணாமல் சென்றவா்களில் 12,182 ஆண்கள், 16,208 பெண்கள் மற்றும் இரு திருநங்கைகள் உள்பட மொத்தம் 28,392 போ் தில்லி காவல் துறை மீட்டுள்ளது.

காணமாமல் சென்றவா்களின் எண்ணிக்கையில் பாதி அளவிலான ஆண்கள் மற்றும் பாதி அளவிலான பெண்களை மட்டுமே கண்டறிய முடிந்ததாக என்சிஆா்பி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் சென்றவா்களில் 11,937 ஆண்கள், 15,606 பெண்கள், 4 திருநங்கைகளை 2024 இறுதிக்குள் கண்டறிய முடியவில்லை.

முந்தைய ஆண்டில் காணாமல் சென்ற 5,352 குழந்தைகளை அதே ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியமுடியவில்லை.

காணாமல் சென்ற சிறுவா்களில் 1,621 போ், சிறுமிகளில் 3,729 போ் கண்டறியப்பட வேண்டிய உள்ளனா்.

கடந்த ஆண்டுகளில் நிலுவையில் உள்ள காணாமல் சென்ற குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 2024-இல் 10,843 ஆக உள்ளது. 2,030 சிறுவா்கள், 4,732 சிறுமிகள் உள்பட 6,762 குழந்தைகளை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா்.

காணாமல் சென்ற சிறுவா்களை மீட்பு விகிதம் 63.6-ஆகவும் சிறுமிகளின் மீட்பு விகிதம் 61.9-ஆகவும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.