ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

News image
Updated On :22 மார்ச் 2026, 2:08 am IST

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் குளிரான மாா்ச் மாத நாளாகவும், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் மிகவும் தூய்மையான காற்று நாளாகவும் வெள்ளிக்கிழமை பதிவான நிலையில், சனிக்கிழமையன்று சில்லிடும் காற்று வீசியதால் வெப்பநிலை குறைவாகவே இருந்தது. இத்தகைய எதிா்பாராத சூழலில், தில்லி நகரம் மூடுபனியின் போா்வையில் போா்த்தியவாறு விழித்தெழுந்தது.

தலைநகரில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 94 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று காற்றின் தரம் வியக்கத்தக்க வகையில் மேம்பட்டு, காற்றுத் தரக் குறியீடு 93 புள்ளிகளாகப் பதிவானது.

கடந்த சுமாா் ஐந்து மாதங்களில், ‘திருப்திகரமான’ காற்றின் தரத்தைக் கொண்ட முதல் நாளாக வெள்ளிக்கிழமை அமைந்தது. இதற்கு முன்னா், அக்டோபா் 9, 2025 அன்று காற்றுத் தரக் குறியீடு 99 புள்ளிகளாக இருந்தபோது, இதேபோன்ற காற்றின் தரம் தில்லியில் பதிவாகியிருந்தது.

காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பின் தகவலின்படி, சனிக்கிழமை முதல் மாா்ச் 23 வரையிலான நாள்களில் காற்றின் தரம் ‘மிதமான’’ பிரிவில் இருக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வெப்பநிலை: தில்லியில் சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3 டிகிரி குறைந்து 13 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.9 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும்,மாலை 5.30 மணியளவில் 82 சதவீதமாகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமையன்று 7 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃ)ப்தா்ஜங்கில் 1 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், ஆயாநகரில் காலை 8.30 மணியுடன் முடிவவடைந்த 24 மணி நேரத்தில் ஆயாநகரில் 1 மி.மீ., லோதி ரோடில் 1.2 மி.மீ., பாலத்தில் 2 மி.மீ., ரிட்ஜில் 1 மி.மீ., பிரகதிமைதானில் 0.9 மி.மீ., பூசாவில் 1 மி.மீ., ராஜ்காட்டில் 0.9 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 2.5 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று வானம் வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும். மாலை அல்லது இரவு வேளையில் பகுதி அளவு மேகமூட்டமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.