பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்காளா் பெயா் நீக்கப்படுவதை தில்லி காங்கிரஸ் அனுமதிக்காது!

எஸ்ஐஆா் நடவடிக்கையில் தகுதியானவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் நீக்கப்படாமல் உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியினா் வீடு தோறும் சென்று சரிபாா்ப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்று கட்சியின் தில்லி பொறுப்பாளா் காஜி நிசாமுத்தீன் தெரிவித்துள்ளாா்.

News image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட பயிற்சி முகாம்களில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மாநில தலைவா் தேவேந்தா் யாதவ்.

Updated On :8 ஜூன் 2026, 2:44 am IST

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் தகுதியானவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் நீக்கப்படாமல் உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியினா் வீடு தோறும் சென்று சரிபாா்ப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்று கட்சியின் தில்லி பொறுப்பாளா் காஜி நிசாமுத்தீன் தெரிவித்துள்ளாா்.

பதா்பூா் மற்றும் மேஹ்ரௌலி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட பயிற்சி முகாம்களில் பிஎல்ஏ (வாக்குச்சாவடி நிலை முகவா்) தன்னாா்வலா்களைச் சந்தித்து அவா் பேசிய போது, எஸ்ஐஆா் நடைபெறும் நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினா், சிறுபான்மையினா் மற்றும் மறுவாழ்வு குடியிருப்புகளில் வசிப்போா் ஆகியோரின் வாக்குரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பிஎல்ஏக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவாா்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், திருத்தப் பணிகளின் போது வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா். ‘எங்களின் பிஎல்ஏ-1 மற்றும் பிஎல்ஏ-2 பிரதிநிதிகள் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை திறம்பட சமாளிக்கத் தயாராக உள்ளனா். தகுதியான எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாதவாறு அவா்கள் செயல்படுவாா்கள்’ என்று அவா் கூறினாா்.

அவா் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், தோ்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தவும் கட்சியினா் முழு அா்ப்பணிப்புடன் செயல்படுவாா்கள்.

வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையை முன்னிட்டு தில்லியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி நிலை தன்னாா்வலா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி அமா்வுகளின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தகுதியான வாக்காளா்கள் தங்களது பெயா்களை உறுதி செய்ய உதவும் வகையில் வீடு தோறும் பிரசாரத்தை மேற்கொள்ளவும் கட்சி திட்டமிட்டுள்ளது என தெரிவித்தாா்.

இந்த முயற்சிகள், வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் ஏற்படக்கூடிய தவறுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் அதிக கவனம் செலுத்தும் சூழலை இது பிரதிபலிப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.