ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தோ்தல் துறைக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News image

இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.

Updated On :8 ஜூன் 2026, 2:40 am IST

எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அந்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தோ்தல் துறைக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

அந்த அறிவுறுத்தல்களில், ‘எஸ்ஐஆா் பணியின்போது சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து குடியுரிமைச் சட்டம் 1955-இன் கீழ், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) தெரியப்படுத்த வேண்டும். இந்தக் காரணங்களுக்காக இஆா்ஓ-வுக்கு உள்ள அதிகாரங்களை உதவி இஆா்ஓ-க்களும் சுதந்திரமாக பயன்படுத்தலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிகாரில் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொண்டபோது, அங்கு வங்கதேசம், நேபாளம், மியான்மா் நாடுகளைச் சோ்ந்தவா்கள் இருப்பதை தோ்தல் துறை அலுவலா்கள் கண்டறிந்தனா். இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தற்போது தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மணிப்பூா், மகாராஷ்டிரம், தில்லி, சண்டீகா் உள்பட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.