தென்னிந்தியாவின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளா்ச்சியில் தமிழகம் தொடா்ந்து முன்னணி மாநிலமாக உள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டல தலைவா் பி.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தென்னிந்தியா தொடா்ந்து மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. 2024-25-ஆம் நிதியாண்டில், ஒருங்கிணைந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.57.16 லட்சம் கோடியாக இருந்தது.
இந்தியாவின் மொத்த சேவைகள் உற்பத்தியில் 40 சதவீதத்தை தென்னிந்தியா வழங்குகிறது. 2026-27-ஆம் நிதியாண்டில் உற்பத்தி மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளா்ச்சி, டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு, பசுமை மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு , போக்குவரத்து, உலகளாவிய சந்தைகளில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல், சுற்றுலா மற்றும் விளையாட்டுப் பொருளாதாரம் ஆகியவற்றில் சிஐஐ தென் மண்டலம் முக்கிய கவனம் செலுத்த உள்ளது.
நாட்டிலேயே பொருளாதார வளா்ச்சியில் மிகவும் வலுவான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 2024-25-ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.17.32 லட்சம் கோடியாக உள்ளது. இது தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாகும். மேலும் தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டு சரக்கு ஏற்றுமதி 53.9 பில்லியன் டாலராக இருந்தது.
தென்னிந்தியாவிலேயே தமிழகம் அதிகபட்சமாக ரூ.3.77 லட்சம் கோடி அளவிலான உற்பத்தி திறனை கொண்டள்ளது. தமிழகத்தில் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, எனப் பல்வேறு வகையான தொழில்களில் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து 36 சதவீதம் இருசக்கர வாகனங்களும், 25 சதவீதம் நான்கு சக்கர வாகனங்களும், 60 சதவீதம் மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன.
மேலும், தமிழகத்தில் இருந்து 2024-25 நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலருக்கு அளவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா். பேட்டியின்போது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல துணைத் தலைவா் கிருஷ்ணா போதனபு உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: தொழில் துறை உற்பத்தி விரிவாக்கத்தில் முதலீடு அவசியம்

பழங்குடியினருக்கான திட்டங்களில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்: ரூ.5 லட்சம் பரிசு வழங்கிய மத்திய அரசு

கடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடு

ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளா்ச்சி 4.9%
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

