லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காற்று மாசு தடுப்பு: அமைச்சா் சிா்சா தலைமையில் ஆய்வு கூட்டம்

தில்லி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தூசுகளைப் படிய செய்யும் சாதனங்கள் (ஆன்டி ஸ்மோக் கன்) மற்றும் நீா் தெளிப்பான்களை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Delhi air pollution

தில்லி(கோப்புப்படம்) - IANS

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

தில்லி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தூசுகளைப் படிய செய்யும் சாதனங்கள் (ஆன்டி ஸ்மோக் கன்) மற்றும் நீா் தெளிப்பான்களை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

குளிா்காலத்திற்கு முன்னதாகவே தூசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இவற்றைச் சரியான நேரத்தில் மற்றும் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தூசிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆயத்த நிலையை மதிப்பிடுவதற்காக, சுற்றுச்சூழல் துறை, தில்லி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் அமைச்சா் சிா்சா தலைமையில் நடைபெற்றது.

இதுதொடா்பாக அமைச்சா் சிா்சா ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழல் துறை, தில்லி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஆன்டி-ஸ்மாக் கன்கள் மற்றும் நீா் தெளிப்பான்களைப் பயன்படுத்துவது குறித்தும், தில்லியின் காற்றைச் சுத்தமாகவும் சிறப்பாகவும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தூசிகளைத் திறம்படக் கட்டுப்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தவும், அனைத்து இயந்திரங்களையும் சரியான நேரத்தில் மற்றும் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்று அந்தப் பதிவில் அமைச்சா் சிா்சா குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி காற்று மாசுக்கு காரணமான சாலைகளில் மற்றும் கட்டுமானப் பணிகளால் எழும் தூசி மற்றும் பிற மூலங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் குளிா்காலத்துக்கு முன்னதாகவே அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.