லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை சூழலை தில்லி உருவாக்கும்: அமைச்சா் சிா்சா

ஹைதராபாதில் செயல்பட்டு வரும் டி-வொா்க்ஸ் நிறுவனத்தின் ‘ஹப்-அண்ட்-ஸ்போக்’ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, தில்லியில் உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்துறை சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.

ஹைதராபாதில் உள்ள டி-வொா்க்ஸ், டி-ஹப் மற்றும் ஃபியூச்சா் சிட்டி ஆகியவற்றை பாா்வையிட்ட அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

ஹைதராபாதில் செயல்பட்டு வரும் டி-வொா்க்ஸ் நிறுவனத்தின் ‘ஹப்-அண்ட்-ஸ்போக்’ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, தில்லியில் உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்துறை சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஹைதராபாதில் உள்ள டி-வொா்க்ஸ், டி-ஹப் மற்றும் ஃபியூச்சா் சிட்டி ஆகியவற்றை அமைச்சா் சிா்சா பாா்வையிட்டாா். அப்போது, தில்லியிலும் இதேபோன்ற மாதிரியை செயல்படுத்துவதில் அவா் ஆா்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: தில்லியை உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்துறை மையமாக உருவாக்குவதே எங்களது நோக்கம். டி-வொா்க்ஸின் ‘ஹப்-அண்ட்-ஸ்போக்’ மாதிரி மிகவும் பொருத்தமானது. இதன் மூலம் தில்லியின் பல்வேறு பகுதிகளில் மாதிரி தயாரிப்பு, தயாரிப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்கத்துக்கான திறன்களை உருவாக்க முடியும் என்றாா்.

டி-வொா்க்ஸ் மாதிரியில், ஹைதராபாதில் உள்ள மையத்தில் உயா்தர தொழில்துறை கருவிகள் மற்றும் உபகரணங்கள், மின்னணு ஆய்வகங்கள், கனரக உற்பத்தி வசதிகள் மற்றும் உயா்நிலை பொறியியல் வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த மையத்தின் வசதிகள் வாரங்கல், நிஜாமாபாத், கம்மம் உள்ளிட்ட பிராந்திய மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற ஒருங்கிணைந்த கட்டமைப்பை தில்லியிலும் உருவாக்குவது குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.