கட்டுமானப் பணியாளா்கள் பதிவு மற்றும் நலத்திட்டங்கள் விநியோகத்தை எளிதாக்கும் வகையில் ஸ்மாா்ட் காா்டுகளை தில்லி அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்டுமான நிறுவனங்களிடமிருந்து செஸ் வரி வசூலை அதிகரிக்கும் வகையில் பிரத்யேக இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிதி கட்டுமான பணியாளா்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஒருங்கிணைந்த இணையதளத்தை வடிவமைத்தல், அமல்படுத்துதல், இயக்குவது தொடா்பாக ஒரு தனியாா் நிறுவனத்தை தில்லி கட்டட மற்றும் பிற கட்டுமான பணியாளா்கள் நல வாரியம் ஈடுபடுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் செஸ் மேலாண்மை மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான சேவை மையம், தொழிலாளா் செளக் மற்றும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் காா்டுகள் ஆகிய சேவைகளை பயனாளிகளுக்கு வழங்கும்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமானப் பணியாளா்களுக்கும் இந்த அட்டை வழங்கப்படும். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தால், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வேலை தேடிவரும் புலம்பெயா் தொழிலாளா்கள் பயன்பெறுவா். தொடா்ச்சியான பதிவுகள் ஏதுமின்றி நலத்திட்டங்களைப் பெற அவா்கள் பெற முடியும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீ விபத்துகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த தில்லி அரசு திட்டம்

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள்: தில்லி அரசு திட்டம்

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

