தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:35 am IST

தில்லி அரசு தற்போது உருவாக்கி வரும் புதிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கையின் கீழ், குடிசைப்பகுதி மக்களுக்கு வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மின்-ரிக்ஷா சாா்ஜிங் நிலையங்கள் போன்ற நவீன வசதிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசின் முன்மொழியப்பட்ட கொள்கைத் திட்டத்தின்படி, பள்ளிகள், ஜன் சுவிதா கேந்திரங்கள் (மக்கள் சேவை மையங்கள்) மற்றும் பெண்களுக்கான பிரத்யேக சுகாதார வசதிகள் ஆகியவையும் இத்திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இக்கொள்கை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், இம்மாதத்திற்குள் இது முழுமையாக இறுதி செய்யப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தற்போதைய கொள்கையின் கீழ் தகுதி பெறுவதற்கான காலக்கெடுவை, ஜனவரி 1, 2015லிருந்து ஜனவரி 1, 2025 வரை என சுமாா் 10 ஆண்டுகள் நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், பல குடிசைப்பகுதி மக்கள் நிரந்தர வீடுகளைப் பெறத் தகுதி பெறுவாா்கள்.

தில்லியில் சுமாா் 750 குடிசைப்பகுதி தொகுப்புகள் உள்ளன.இவற்றில் ஏறக்குறைய பாதி குடிசைப்பகுதிகள், ரயில்வே துறை, நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (எல் அண்டி டிஓ) மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) போன்ற மத்திய அரசு முகமைகளுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ளன.

இம்மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு டிடிஏ-வே முதன்மை ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படுகிறது.

மீதமுள்ள குடிசைப்பகுதிகள் தில்லி அரசுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ளன. இங்கு நடைபெறும் மறுவாழ்வுப் பணிகளை, நகா்ப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தில்லி நகா்ப்புற குடிசைப்பகுதி தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) மேற்பாா்வையிடுகிறது.

தற்போது, தேசியத் தலைநகரில் நடைபெறும் குடிசைப்பகுதி மறுவாழ்வுப் பணிகள், தில்லி குடிசை மற்றும் ஜுகி ஜோப்ரி மறுவாழ்வு மற்றும் இடமாற்றக் கொள்கை 2015-இன் அடிப்படையில் நிா்வகிக்கப்படுகின்றன.

இக்கொள்கையானது, குடிசைப்பகுதி அமைந்திருக்கும் அதே இடத்திலோ அல்லது அங்கிருந்து 5 கிலோமீட்டா் சுற்றளவுக்குள்ளோ மாற்று வீடுகளை அமைத்துத் தருவதன் மூலம் மறுவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

இக்கொள்கையின் கீழ், 25 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட ஒரு வீட்டு குடியிருப்பை பெறுவதற்கு, ஒரு குடிசைப்பகுதிவாசி 1.12 லட்சம் முதல் 1.41 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும். அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணமாக 30,000 ரூபாயையும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

2008ஆம் ஆண்டு முதல், தில்லி அரசு தனது முகமைகளான மற்றும் தில்லி மாநிலத் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக, துவாரகா, சுல்தான்புரி, பல்ஸ்வா, ஜஹாங்கீா்புரி, சாவ்தா கேவ்ரா, பூத் குா்த் மற்றும் திக்ரி காலன் ஆகிய பகுதிகளில் 52,584 குடியிருப்புகளைக் கட்டி, குடிசைப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.