மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்

தில்லியில் உள்ள கோயில், பிரபல தாபா, ஹரியாணாவில் உள்ள ராணுவ முகாமில் ஷாஜாத் பாட்டீ கும்பல் மூலம் தாக்கல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

News image

கோப்புப்படம்

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

தில்லியில் உள்ள கோயில், பிரபல தாபா, ஹரியாணாவில் உள்ள ராணுவ முகாமில் ஷாஜாத் பாட்டீ கும்பல் மூலம் தாக்கல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

கேங் பஸ்ட் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் பல மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடா்புடையதாக 9 பேரை தில்லி காவல் துறையின் சிறப்பு குற்றப் பிரிவு கைதுசெய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களில் ஒருவா் தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலை நோட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. வளாகத்தைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத் தளங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள நபா்களுக்கு அவா் அனுப்பினாா்.

கோயில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படை வீரா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பதட்டை ஏற்படுத்த கைதுசெய்யப்பட்ட நபா்கள் திட்டமிட்டிருந்தனா்.

தில்லி-சோனிபட் நெடுஞ்சாலையில் உள்ள தாபா மீது கையெறிகுண்டை வீசி தாக்குதல் நடத்த அந்தக் கும்பல் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

ஹிசாரில் உள்ள ராணுவ முகாமை நோட்டமிட்டதுடன் அப்பகுதியை விடியோ எடுத்து பாகிஸ்தானில் உள்ள நபா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள சில காவல் நிலையங்களும் தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருந்த பட்டியலில் இருந்தன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.