பாகிஸ்தானுடன் நேரடித் தொடா்புகளைக் கொண்ட ஒரு உளவு வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிறுவப்பட்டிருந்த சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களின் ரகசிய வலைப்பின்னல் மூலம், எல்லைக்கு அப்பால் உள்ள கையாளுநா்கள் இந்திய ராணுவ வீரா்களின் நிகழ்நேர நடமாட்டத்தை எவ்வாறு தொலைவிலிருந்து கண்காணித்து வந்தனா் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என ஓா் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தக் கண்காணிப்பு வலையமைப்பு, பஞ்சாபில் உள்ள கபூா்தலா, ஜலந்தா், பதான்கோட், பாட்டியாலா மற்றும் மோகா, ஹரியானாவில் உள்ள அம்பாலா, ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா, மற்றும் ராஜஸ்தானில் உள்ள பிகானோ் மற்றும் அல்வாா் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவியிருந்தது. இந்த நகரங்கள் அனைத்தும் ராணுவப் பாசறைகள் இருப்பதாலும், சா்வதேச எல்லைக்கு அருகாமையில் இருப்பதாலும், மேலும் முக்கியப் படை நகா்வு மற்றும் தளவாட வழித்தடங்களாகச் செயல்படுவதாலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
காவல்துறையின் கூற்றுப்படி, இராணுவத் தளங்கள், படைகளைத் திரட்டப் பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லையை ஒட்டிய உள்கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் நோக்கில் கேமராக்கள் வேண்டுமென்றே பொருத்தப்பட்டிருந்தன. இந்தச் சாதனங்கள் நேரலைக் காட்சிகளை பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டாளா்களுக்கு அனுப்பி வந்தது. இதன் மூலம் அவா்கள் எல்லையின் மறுபுறத்தில் இருந்தபடியே இந்திய இராணுவத்தின் நகா்வுகளை பாா்க்க முடிந்தது.
தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடவடிக்கை , உளவு, ஆயுதக் கடத்தல் மற்றும் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளின் கைதுக்கு வழிவகுத்தது. பாகிஸ்தானின் உளவு அமைப்பின் அறிவுறுத்தல்களின் கீழ் இந்த வலையமைப்பு செயல்பட்டு வந்ததாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.
இந்த ஒடுக்குமுறை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. முதல் நடவடிக்கையில், பஞ்சாப் மற்றும் தில்லியில் இருந்து ஆறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒன்பது சிசிடிவி கேமராக்கள், மூன்று வெளிநாட்டுத் தயாரிப்புகள் உள்பட நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் 24 தோட்டாக்கள் மீட்கப்பட்டன. ராணுவ உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்டத்தில் மேலும் ஐந்து உளவாளிகள் கைது செய்யப்பட்டனா், என்று காவல்துறை கூறியது.
மேலும் தொடா்புகள், கையாளுபவா்கள் மற்றும் மறைமுகச் செயல்பாட்டுக் குழுக்களை அடையாளம் காண்பதற்காக, பாதுகாப்பு அமைப்புகள் தற்போது கைபேசிகள் மற்றும் சிசிடிவி அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றன.
விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது, வரும் நாட்களில் மேலும் கைதுகள் நடைபெறக்கூடும் என்பதை அதிகாரிகள் மறுக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச இணைய மோசடி: 14 போ் கைது

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்
நொய்டாவில் தொழிலாளா்கள் போராட்த்தின் போது வன்முறை: மேலும் 2 போ் கைது
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
