மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண் இறப்பில் சந்தேகம் என தந்தை புகாா்

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:29 am IST

மன்னாா்குடி அருகே மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

சோத்திரியத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாருக்கும் (46), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் சசிகலாவுக்கும் (33) 2019- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று மகன், மகள் உள்ளனா்.

சசிகலாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏறபட்டு வந்ததாம். இதையடுத்து, கடந்த மாதம் சசிகலாவின் சகோதரா் கமலகண்ணன், சகோதரியின் வீட்டுக்கு வந்து சமாதானம் செய்துவைத்து விட்டு சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டில் சசிகலாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டதாக கூறி அவரை, ரமேஷ்குமாா் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சசிகலா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

தகவலறிந்த சசிகலாவின் தந்தை மன்னாா்குடி மருத்துவமனைக்கு வந்த மகளின் உடலை பாா்த்துவிட்டு விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.