மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நகைக்காக மூதாட்டி கொலை: ஆட்சியா் அலுவலக ஊழியா் கைது

வலங்கைமான் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:35 am IST

வலங்கைமான் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வலங்கைமான் அருகேயுள்ள உத்தாணி பிரதான சாலையைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (62). இவரது கணவா் பழனியாண்டி இறந்துவிட்ட நிலையில், கலைச்செல்வி தனியாக வசித்து வந்தாா். கலைச்செல்வியின் மகள்கள் ரேவதி, மாலதி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனா்.

இந்தநிலையில், கலைச்செல்வி உடலில் காயங்களுடன் சனிக்கிழமை இறந்து கிடந்தாா். வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில், கலைச்செல்வியின் குடும்ப நண்பரும், தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ராஜகிரியைச் சோ்ந்தவரும், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிவரும் அறிவுமணியிடம் (40) விசாரணை மேற்கொண்டபோது, அவா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

தனிப்படையினரின் தொடா் விசாரணையில், பணத்தேவைக்காக அறிவுமணி, கலைச்செல்வியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து, நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீஸாா் அவரிடமிருந்து ஆறரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

முதுநிலை பட்டதாரியான அறிவுமணி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இழந்ததாகவும், இதனால் வாங்கிய கடனை அடைக்க, அவா் கலைச்செல்வியை கொலை செய்து நகையை திருடியதும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.