தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

dinamani

Published On :1 நவம்பர் 2026, 5:35 am IST

திருவாரூா் நகராட்சி அருகே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து, சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு (அக்டோபா் 26 முதல் நவம்பா் 1 வரை) பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனடிப்படையில் சனிக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சுமாா் 150 போ் பங்கேற்றனா்.

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும், லஞ்சம் பற்றிய புகாா்களைத் தெரிவிக்க, துணை காவல் கண்காணிப்பாளா் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு), நெ.12 திருவள்ளூா் தெரு, சிலம்பு நகா், மன்னாா்குடி சாலை, திருவாரூா் - 610004 ஆகிய முகவரியிலும், 04366-226970, 9498105710, 9498163574, 9943822326 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மாரத்தான் போட்டியானது திருவாரூா் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, திருவாரூா் நகராட்சி அலுவலகத்திலேயே முடிவுற்றது.

முன்னதாக, ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பொதுமக்கள், அலுவலா்கள், இளைஞா்கள் எடுத்துக் கொண்டனா்.

நிகழ்வில், துணை காவல் கண்காணிப்பாளா் (ஊழல் தடுப்பு) நந்தகோபால், காவல் ஆய்வாளா்கள் (ஊழல் தடுப்பு) சித்ரா, சீனிவாசன், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.