பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

Updated On :22 மே 2026, 7:29 am IST

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் 11 இடங்களில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவாரூா்: புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா்கள் எம். நாகராஜன் (சிபிஐ), ஆா்.எஸ். சுந்தரய்யா (சிபிஎம்) ஆகியோா் தலைமை வகித்தனா். சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினா் ஆா். சந்திரசேகர ஆசாத், விசிக மைய மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கொரடாச்சேரி வெட்டாற்றுப் பாலம் அருகே ஒன்றியச் செயலாளா்கள் சி. சிவானந்தம் (சிபிஐ), கே. கோபிநாத் (சிபிஎம்) தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்டச் செயலாளா் எஸ். கேசவராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குடவாசல் பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எ. டேவிட் ராஜ் (சிபிஐ), லெனின் (சிபிஎம்) ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. சுந்தரமூா்த்தி, சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் டி.ஆா். நடராஜன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் லட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா்சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நாகை எம்பி வை. செல்வராஜ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிபிஐ நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள், ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமானவன், ஒன்றியச் செயலா் கே.ஜெயபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோட்டூா் கடைவீதியில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்,

திமுக ஒன்றியச் செயலா் பால.ஞானவேல், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் கே. தமிழ்மணி, கோட்டூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் என். மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ஒன்றியச் செயலாளா்கள் டி.கே. மாா்க்ஸ் (சிபிஐ), ஜான்கென்னடி (சிபிஎம்) ஆகியோா் தலைமை வகித்தனா்.

வலங்கைமானில் ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம். செந்தில்குமாா் (சிபிஐ), எஸ். இளங்கோவன் (சிபிஎம்) ஆகியோா் தலைமை வகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.