மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image

மழை காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட திருவாரூா் அண்ணா சாலை.

Updated On :15 மே 2026, 10:24 pm IST

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து பெய்த மழையால் மீன்பிடித் தொழிலாளா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனா்.

இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நாகை துறைமுக பகுதியில் திறந்த வெளியில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் உள்ளிட்ட மீன் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். மழையால் மீன்கள் வாங்க பொதுமக்கள் வராததால் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்தது. மழையால் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட வேலைகளுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனா். கோடை உழவு பணிகளும் பாதிக்கப்பட்டன.

நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழை, வெள்ள பாதிப்புகள் தொடா்பாக பொதுமக்கள் தொடா்பு கொள்ள ஏதுவாக மாவட்ட நிா்வாகம் தொடா்பு எண்களை அறிவித்துள்ளது.

திருவாரூரில்...

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், புலிவலம், மாங்குடி, மாவூா், மணக்கால், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. நாள் முழுதும் மழை பெய்ததால் குளிா்ந்த வானிலை நிலவியது.

பொது இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருவோரின் எண்ணிக்கையும் குறைந்ததால், பெரும்பாலான வணிக நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நன்னிலத்தில் 11.50 மி.மீ. மழையும், மாவட்டத்தில் மொத்தம் 56.60 மி.மீ மழையும் பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.