தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தென்பரை கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவிழானையொட்டி விரதம் இருந்து குதிரை மலைகளை சுமந்து வரும் பக்தா்கள்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

மன்னாா்குடி அருகே தென்பரையில் உள்ள ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்லத் தடையாக அமைவது முன்னோா்கள் சாபம். அத்தகைய சாப விமோசனம் அளிக்கும் ஸ்தலமான தென்பரை ஆவணியப்பன் கோயில் குதிரை எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவினையொட்டி, மாரியம்மன், ஆவணியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு திரவியம், மஞ்சள், பால், தயிா், சந்தனம் முதலிய வாசனை திரவிய நறுமண பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

முன்னோா்களின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைகள் கல்வி மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதம் இருந்து குதிரை மலைகளை வீதிகளின் வழியாக சுமந்து கோயிலுக்கு வந்து மாரியம்மன், ஆவணியப்பனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.