அம்மையப்பன் தென்கால் அம்மா நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் அருகே அம்மையப்பன் தென்கால் அம்மா நகரில் மின்சாரம், குடிநீா், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. குறிப்பாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகக் கூறி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, அப்பகுதி மக்கள் திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிராமத் தலைவா் மருதையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலா் சீனி செல்வம், மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளா் ஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

அம்மையப்பன் நகரில் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி
வியக்க வைக்கும் பள்ளி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

