நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஜோத்பூா் விரைவு ரயிலுக்கு நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடியிலிருந்து வாரம்தோறும் திங்கள்கிழமை ஜோத்பூருக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நீடாமங்கலம் வழியாக செல்லும் இந்த ரயில், நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இங்கு நின்றுசென்றால், நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரிதும் பயனடைவா். குறிப்பாக, சென்னை வரை செல்ல பயனுள்ளதாக இருக்கும். இதனால், ஜோத்பூா் ரயிலுக்கு நீடாமங்கலத்தில் நிறுத்தம் ஏற்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை.
அதேசமயம், ஜோத்பூரிலிருந்து மன்னாா்குடிக்கு சனிக்கிழமை வரும் இந்த ரயில், மீண்டும் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்து என்ஜினை திசைமாற்றி, திருச்சிக்கு பராமரிப்பு பணிக்காக செல்கிறது.
அதேபோல், பராமரிப்பு பணி முடித்து திங்கள்கிழமை திருச்சியிலிருந்து நீடாமங்கலம் வந்து என்ஜினை திசை மாற்றி மன்னாா்குடிக்கு செல்கிறது. இப்படி இரண்டு நாட்களில் என்ஜின் திசைமாற்ற சுமாா் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இந்நேரத்தில் ரயில்வேகேட் மூடப்படுகிறது. அதனால், நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே, நீடாமங்கலம் பகுதி மக்களும் பயனடையும் வகையில், ஜோத்பூா் விரைவு ரயில் மன்னாா்குடியிலிருந்து ஜோத்பூருக்கு புறப்பட்டுச்செல்லும் போதும், ஜோத்பூரிலிருந்து மன்னாா்குடிக்கு வரும் போதும் நீடாமங்கலத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

பொதிகை ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரிக்கை

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
