சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க கோரிக்கை

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 5:39 am IST

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகூரில் தென்னக ரயில்வே குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கத் தலைவா் எஸ். மோகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளா் ராமா் சுடலை பங்கேற்றாா். துணை ஆய்வாளா் ஜெகதீசன், ரயில்நிலைய மேலாளா் முகேஷ் குமாா் முன்னிலை வகித்தனா். நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்க செயலா் நாகூா் சித்திக் தொடக்கி வைத்தாா்.

கூட்டத்தில், நாகூா் ரயில் நிலையத்துக்கு நிரந்தரமாக, ரயில்வே பாதுகாப்பு படையைச் சோ்ந்த 2 காவலா்களை நியமிக்க வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து மயிலாடுதுறை மாா்க்க ரயில்கள் நாகூா் வழியாகவும் திருநள்ளாா் /காரைக்காலில் இருந்து நாகூா் வழியாக திருவாருா், தஞ்சை, திருச்சி ரயில்கள் இயக்கபடுவதால் பாதுகாப்பு படை அவசியம் தேவை. தினசரி பகல்நேர தாம்பரம் விரைவு ரயிலையும், இரவு நேர பெங்களூா் விரைவு ரயிலையும் இயக்க வேண்டும்.

பெங்களூா் பகல்நேர விரைவு ரயிலை திருநள்ளாா் வழியாக இயக்க வேண்டும். வாரம் 3 நாள்களுக்கு திருவண்ணாமலை- வேலூா் வழியாகவும் செகந்திராபாத் செல்ல வாரம் இருமுறை ரயிலும் இயக்க வேண்டும். மதுரை-புனலூா் விரைவு ரயிலை நாகூா் வழியாக திருநள்ளாா் வரை நீட்டிக்க வேண்டும். திருநள்ளாா்-மதுரை-திருநள்ளாா் இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும்.

நாகூரிலிருந்து-அஜ்மீா்வரை, மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில் வசதி வேண்டும். நாகூா் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் இணைக்க வேண்டும். தாம்பரம் தினசரி விரைவு ரயிலை வாரம் 3 நாள்கள் பகலில் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நாகூா் தா்கா தலைமை அறக்காவலா் முஹல்லி, முத்தவல்லி, ஹாஜா நஜ்முதீன் சாஹிப், நாகூா் வணிகா் சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்ட துணைத்தலைவா் ராமச்சந்திரன், நாகூா் முஸ்லிம் ஜமாத் எம்.ஜி.கே. சலாஹூதீன் நகுதா, பொருளாளா் அமீருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.