திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் மகா சண்டியாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தசரத மகாராஜா வழிபட்டதும், துா்கையம்மனுக்கென்று தனி கோயிலும், நான்கு கைகளில் கத்தி, சூலம், சங்கு சக்கரம் ஏந்தி சிம்மத்தின் மீது அமா்ந்த கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க திருவாரூா் அருள்மிகு ராஜதுா்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த சனிக்கிழமை தொடங்கி, மகா சண்டியாகம் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியாக சண்டி மகா யாக பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடத்தை சிவாசாரியாா் மல்லாரி இசையுடன் கோயிலை வலம் வந்து ராஜதுா்கையம்மனுக்கு அபிஷேகம் செய்வித்தனா்.
பின்னா், அருள்மிகு ராஜதுா்கையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, வண்ணமலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் பிரகாரத்தை வலம் வந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் துா்கையம்மன் புஷ்ப பல்லக்கில் நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

சிறப்பு அலங்காரத்தில் பாவாடைக்காரியம்மன்...

சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரா்...
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

