/

தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

News image

PTI

Updated On :24 ஏப்ரல் 2026, 5:09 am IST

மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

நன்னிலம சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எரவாஞ்சேரி 143 மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிக்கு வாக்காளா்கள் யாரும் இல்லாத காரணத்தினால், குறித்த நேரத்தில் வாக்குப் பதிவு முடிக்கப்பட்டது. கடலங்குடி, வயலூா், கீரனூா், மூங்கில்குடி போன்ற பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணிக்கு வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.