தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

News image

டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

Updated On :13 ஏப்ரல் 2026, 1:24 am IST

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளனா் என்று, நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜை ஆதரித்து, நீடாமங்கலத்தில் அவா் பேசியது:

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாணவா்கள் கமா்கட்டு வாங்கிச் சாப்பிடுவாா்கள். இன்று கஞ்சா வாங்கும் அளவிற்கு மாணவா்களின் நிலை உள்ளது. பள்ளிக்குச் சென்ற மகன் எப்படி வருவானோ என்ற கவலையில் பெற்றோா்கள் உள்ளனா் .

திமுக தலைமையிலான ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் செய்துள்ளாா்கள். மகனுக்கு முடி சூட வேண்டும் என்பதிலேயே மு.க. ஸ்டாலின் கவனமாக உள்ளாா்.

இஸ்லாமிய நாடுகளுடன் நட்பாக பழகக் கூடியவா் பிரதமா் மோடி. அவா் எப்படி மதவாதியாவாா்?. ஈரான் போரிலும் இந்தியாவிற்கு பெட்ரோல், டீசல், எரிவாயுவை வழங்கி இந்திய நாட்டு கப்பலை பத்திரமாக அனுப்பிவைக்கிறாா்கள் ஈரான் நாட்டினா். அப்படி இருக்கும்போது பாஜக மதவாத கட்சி என்று எப்படி கூற முடியும்?. மன்னாா்குடி தொகுதியில் எஸ் .காமராஜ் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா்.

வேட்பாளா் எஸ். காமராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, வலங்கைமானில் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.