திருவாரூா் அருகே சாலையோரத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
திருவாரூா் அருகே வடகண்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம். அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். இவா், தனது அறுபதாம் கல்யாண நிகழ்வையொட்டி, குடும்பத்தினருடன் திருக்கடையூா் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை காரில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். காரை செல்வத்தின் மகன் புவிபாலன் ஓட்டி வந்தாா்.
எட்டியலூா் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த குழந்தைகள் உள்பட 7 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள், அவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

