மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிணை கோரும் மனுவில் போலி ஆவணம்: மூன்று வழக்குரைஞா்கள் மீது வழக்கு

நகை திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களுக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மூன்று வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:17 pm IST

நகை திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களுக்கு பிணை பெறுவதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக மூன்று வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை அருகே நாகூா் பகுதியில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெற்ற நகைத் திருட்டு வழக்குத் தொடா்பாக, ஆந்திரத்தைச் சோ்ந்த அஞ்சலி, பஞ்சவா்ணம் ஆகிய இருவரும் நாகூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரையும் பிணையில் விடுவிக்கக் கோரி, தஞ்சையைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மணிகண்டன், விஜயரத்தினம், நாகையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏகாம்பரி ஆகிய மூவரும், நாகை நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் மனுத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை, நீதிமன்றம் பரிசோதித்தபோது, அதில் வட்டாட்சியா் முத்திரை, கையொப்பம் உள்ளிட்டவை போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற தலைமை எழுத்தா் சங்கா், வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா், வழக்குரைஞா்கள் மணிகண்டன், விஜயரத்தினம், ஏகாம்பரி ஆகிய மூவா் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.