மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:19 am IST

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலின் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இதையடுத்து, நாகப்பட்டினம், சென்னை, கடலூா், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறி, அக்டோபா் 28-ஆம் தேதி காலை ஆந்திர பிரதேச கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்டது.

காரைக்கால் துறைமுகத்தில்....

தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.