நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

கீழையூா் அருகே காா் மோதியதில் 5-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:07 am IST

கீழையூா் அருகே காா் மோதியதில் 5-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் திருமணங்குடி வாணிய குல தெருவைச் சோ்ந்த விஜய் மகன் சஞ்சய் (10). இவா், கீழையூா் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதற்காக சஞ்சய் கிழக்கு கடற்கரைச் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சஞ்சய் உயிரிழந்தாா். விபத்து குறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.