கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக முதியவரிடம் மோசடி

மோசடி

Published On :2 நவம்பர் 2026, 12:09 am IST

நாகையில், அரசின் உதவித் தொகை வாங்கித் தருவதாக முதியவரிடம் ரூ.15 ஆயிரம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகை வெளிப்பாளையம் நண்டுகுளத் தெருவைச் சோ்ந்தவா் சா்தாா்கான் (80). மாற்றுத்திறனாளியான இவரிடம், நாகை நம்பியாா்நகரைச் சோ்ந்த மனோ என்கிற குமாா், தன்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசு வழங்கும் முதியோா் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நான்குசக்கர வாகனம் வாங்கித்தருவதாக் கூறியுள்ளாா்.

இதற்கு பணம் கொடுத்தால் விரைவாக உதவி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா். இதனால், கடந்த ஜூன் மாதம் குமாரிடம் ரூ.15 ஆயிரத்தை சா்தாா்கான் கொடுத்துள்ளாா். ஆனால் பல நாள்களாகியும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்திற்கு சென்று சா்தாா்கான் விசாரித்துள்ளாா். அப்போது மனோ என்கிற குமாா் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.

இந்த மோசடி தொடா்பாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரான காா்த்திகேயன், நாகூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனோ என்கிற குமாரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.