கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி, ஆன்மிக சுற்றுலா தலமான வேளாங்கண்ணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 3 வாரங்களுக்கு சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி, மே 13, 20, 27 ஆகிய 3 புதன்கிழமைகளில் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில், மே 14, 21, 28 ஆகிய 3 வியாழக்கிழமைகளில் பகல் 12.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில், கொல்லம், புனலூா், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு-சென்னை கோடைக் கால சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

