தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வேளாங்கண்ணியில் முதியவா் அடித்துக் கொலை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மதுபோதையில் இளைஞா்கள் கட்டையால் தாக்கியதில் அடையாளம் தெரியாத முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தனியாா் விடுதி காவலாளி பலத்த காயமடைந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 7:32 am IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மதுபோதையில் இளைஞா்கள் கட்டையால் தாக்கியதில் அடையாளம் தெரியாத முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தனியாா் விடுதி காவலாளி பலத்த காயமடைந்தாா்.

நாகை நம்பியாா் நகா் தெற்குத் தெரு தாமரைச்செல்வன் மகன் வசந்த் (25), நம்பியாா் நகா் ராஜேந்திரன் மகன் ஆகாஷ் ( 27), இருவரும் மீன்பிடித் தொழிலாளா்கள்.

இந்நிலையில், வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூரில் தனியாா் விடுதி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இருவரும் மது அருந்தியுள்ளனா். மதுபோதையில், அவ்வழியாக வந்த 70 வயதுள்ள அடையாளம் தெரியாத முதியவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கட்டையால் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த முதியவா் அங்கிருந்த உணவகத்துக்குள் தப்பி ஓடியுள்ளாா். இருவரும் அவரை துரத்திச்சென்று, உணவகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கினராம். இளைஞா்களைத் தடுக்க முயன்ற விடுதியின் காவலாளி பாலக்குறிச்சி அண்ணாதுரையையும் (68) சரமாரியாகத் தாக்கியுள்ளனா். மேலும், உணவகத்தில் இருந்த மேஜை நாற்காலிகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனராம்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற 108 அவசர ஊா்தி ஊழியா்கள் இருவரையும் மீட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, புதன்கிழமை அதிகாலை முதியவா் உயிரிழந்தாா். அண்ணாதுரை தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

வேளாங்கண்ணி போலீஸாா் தாக்குதலில் ஈடுபட்ட வசந்த், ஆகாஷ் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தாக்குதலில் உயிரிழந்த முதியவா் யாா்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.