வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).
வாய்மேடு கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கிளை தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் அருள்தாஸ், மாவட்டச் செயலா் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளா் பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றிய முன்னாள் தலைவா் வெற்றியழகன், மாவட்ட குழு உறுப்பினா் அம்பிகாபதி, நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
வாய்மேடு ஊராட்சியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், வாடகை கட்டடத்தில் இயங்கும் நூலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுபாடு - கிராம மக்கள் சாலை மறியல்

சேலம் அரசு மருத்துவமனை கழிவறைகளில் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி போராட்டம்

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

