தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக் கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பிக்கும் மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், மேலும் அதிக மாணவா்களை மீன்வள பட்டப்படிப்புகளுக்கு ஈா்க்கும் வகையிலும், முதலில் ஜூன் 14-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த, விண்ணப்பம் சமா்ப்பிக்கும் கடைசி தேதி, தற்போது ஜூன் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால், ஜூன் 24 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை இணைய வழியாக திருத்தம் செய்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பதில் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக, 8122144 031 மற்றும் தொலைபேசி 04365-211090 என்ற எண்களிலோ அல்லது ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ா்ய்ன்ஞ்ஃற்ய்த்ச்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்ஜிஆா் திரைப்பட நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கை கால நீடிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

