இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் வரும் 23- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பிவிஎஸ்சி ஏஹெச் 660 இடங்கள் உள்ளன.
திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் இருக்கின்றன.
இதேபோன்று, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்நிலையில், பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப்பதிவு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அவகாசம் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள் மற்றும் அயல்நாட்டினா் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 10,678 போ், பி.டெக் படிப்புகளுக்கு 5,356 போ் என மொத்தம் 16,034 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகை மீன்வள பல்கலையில் இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி! - அன்புமணி

கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 25-இல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியானது! கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

