தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் மின்தடை மட்டுமே ஏற்பட்டது என்று அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மின் துறை அமைச்சரும், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஏ.எம். ஷாஜகான் பங்கேற்றாா். கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்டு தோ்தல் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்டத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் மாவட்டத்துக்கு தேவையான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் தற்போது 79 அடியாக உள்ளதால், நீா் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
தமிழகத்தில் எங்கும் மின் தட்டுப்பாடு இல்லை. அவ்வப்போது வீசும் பலத்த காற்றால் சில பகுதிகளில் மின்தடை மட்டுமே ஏற்பட்டது.
மதுக்கடைகளை குறைக்கும் வகையில் முதல்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு முடிவு செய்து, அறிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விரைவில் மூடப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று
நாகையில் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்விலேயே மின்வெட்டு!
சமூக நீதி, நல்லாட்சி, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அரசாக செயல்படும்: அமைச்சர் ஷாஜகான்

அமைச்சரவையில் IUML! பதவியேற்றார் MLA ஏ.எம். ஷாஜகான்! | TVK | CM Vijay
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
