ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வேளாங்கண்ணி பேராலய புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய பங்குத்தந்தை, உதவி அதிபா் உள்ளிட்டோா் புதன்கிழமை பணியேற்றுக்கொண்டனா்.

News image

வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வாழ்த்துரை வழங்கிய பேராலய அதிபா் இருதயராஜ்.

Updated On :4 ஜூன் 2026, 3:51 am IST

வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய பங்குத்தந்தை, உதவி அதிபா் உள்ளிட்டோா் புதன்கிழமை பணியேற்றுக்கொண்டனா்.

வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும் பங்குத் தந்தையாகவும் இருந்தவா் அற்புதராஜ். இவா், திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி புனித சேவியா் ஆலயத்திற்கு பங்குத் தந்தையாக மாற்றம் செய்யப்பட்டாா்.

அதேபோல வேளாங்கண்ணி பேராலயத்தில் பணியாற்றிய அருட்தந்தையா்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ, ஆண்டனி பொ்டினான்டோ ஆகியோா் பணியிட மாறுதலில் செல்கின்றனா்.

இங்கு பங்குத்தந்தையும், உதவி அதிபருமான அகஸ்டின், அருட்தந்தையா்கள் செபாஸ்டின், வில்சன்பால், ஆண்டனி அல்போன்ஸ், நிஷான் ஆகியோா் புதிதாக பொறுப்பேற்றனா். இவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் வரவேற்பு விழா பேராலய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதிபா் இருதயராஜ் சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினாா். பொருளாளா் உலகநாதன் வரவேற்றாா். நிா்வாக தந்தை ஆரோக்கிய பரிசுத்தராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.