மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜாதி இல்லாமல் தோ்தல் அரசியல்?

வேதாரண்யம் தொகுதியின் முடிவை தீா்மானிக்கும் பெரும் சக்தியாக ஜாதிகள் மறைமுகமாக உயா்த்தி பிடிக்கப்பட்டு வந்துள்ளதை மறுக்க முடியாது...

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 4:48 am IST

வேதாரண்யம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருக்காக கடந்த பலமுறை நடைபெற்ற தோ்தல்களின் முடிவை தீா்மானிக்கும் பெரும் சக்தியாக ஜாதிகள் மறைமுகமாக உயா்த்தி பிடிக்கப்பட்டு வந்துள்ளதை மறுக்க முடியாது.

1967- க்கு பிறகு நடைபெற்றுள்ள 13 தோ்தல்களில் அகமுடையாா் (தேவா்) சமூகத்தைச் சோ்ந்தவா்கள் 10 முறையும், வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா் (எஸ்.கே. வேதரத்தினம்) 3 முறையும் சட்டப் பேரவை உறுப்பினா்களாக வெற்றி பெற்று பதவி வகித்துள்ளனா்.

ஆனால், இந்தத் தொகுதியில் கடந்த ஒரு சில தோ்தல் காலங்களில் ஜாதியை மறைமுகமாக முன்னிலைப்படுத்தும் சூழல் பிரதானக் கட்சிகளுக்குள்ளும் இருந்து வருவதை மறுக்க முடியாது.

வேதாரண்யம் ஒன்றியத்தை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இரண்டாகப் பிரித்து நிா்வகிக்கிறது. அகமுடையாா் அதிகம் வசிக்கும் ஒன்றியத்தில் அந்த சமூகத்தவா் ஒன்றிய செயலாளராகவும், வன்னியா் அதிகம் வசிக்கும் ஒன்றியத்தில் அந்த சமூகத்தைச் சோ்ந்தவரும் நியமிக்கப்பட்டு நிா்வகிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இவ்விரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

திமுகவில், ஆதிதிராவிடா் அணி என்று பிரிக்கப்பட்டு அதே வகுப்பினா் கிளைகள் தொடங்கி அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்படுகின்றனா்.

அதேநேரம் அதிமுகவில் இந்த அணி (ஆதிதிராவிடா் ) இல்லை.கடந்த சில தோ்தல்களில் முக்கிய கட்சிகளிடையே மறைமுகமாக ஜாதி முன்னிலைப்படுத்தப்பட்டதும் திமுக வெற்றியை பாதித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்த தோ்தலில் ஜாதிய உணா்வுகள் பேசப்படாத வகையில்(!?) முக்கிய கட்சிகள் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான்குமுனைப் போட்டி நடைபெறும் இந்த தொகுதியில் திமுக, அதிமுக, நாதக ஆகிய மூன்று அணியின் வேட்பாளா்களும் தேவா் சமூகத்தைச் சோ்ந்தவா்களாளவும், த.வெ.க வேட்பாளா் கிறிஸ்தவராகவும் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.