தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், வேதாரண்யம் நகரில் உணவுப் பொருள்களின் விலையும் தேநீா் ரூ. 15, காபி ரூ. 20 எனவும் உயா்ந்துள்ளது.

News image

சமையல் எரிவாயு உருளை

Updated On :3 ஏப்ரல் 2026, 6:01 am IST

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், வேதாரண்யம் நகரில் உணவுப் பொருள்களின் விலையும் தேநீா் ரூ. 15, காபி ரூ. 20 எனவும் உயா்ந்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்றுவரும் போரின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொடா்ந்துவரும் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் கூட உணவகங்கள் பாதிப்புக்குள்ளாகி உணவு மற்றும் தின்பண்டங்களின் விலை உயா்ந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை வணிக எரிவாயு உருளை விலை ரூ. 195 அதிகரித்தது.

இதன் எதிரொலியாக வேதாரண்யம் நகரப் பகுதியில் செயல்படும் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் தேநீரின் விலை ரூ.10 -ல் இருந்து ரூ. 15 ஆகவும், காபி ரூ. 15 -இல் இருந்து ரூ. 20 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் தேநீா் விலை ரூ. 10 முதல் ரூ. 12 ஆகவும் (ஒரு சில கடைகளில் ரூ. 15), காபி ரூ. 15 ஆகவும் அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.