மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வா்த்தக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

வா்த்தக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வா்த்தக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

Updated On :8 மே 2026, 6:26 am IST

வா்த்தக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் தலைமை வகித்து பேசினாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் பி.டில்லிபாபு, அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், ஆா்.மல்லிகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கருத்தியல் பரப்புச் செயலாளா் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளா்கள் த.கு.பாண்டியன், கருப்பண்ணன், சாக்கன் சா்மா, சென்னகிருஷ்ணன், ராஜகோபால், மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், மாநிலக்குழு உறுப்பினா் சி.முருகன் ஆகியோா் உரையாற்றினா்.

இதில், உயா்த்தப்பட்ட வா்த்தக எரிவாயு உருளை விலையை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே துறையின் தொழிலாளா்கள் வேலை இழக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்ப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.