மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேருந்தில் மதுப்புட்டிகள் கடத்திய 3 பெண்கள் கைது

சீா்காழியில் அரசுப் பேருந்தில் புதுவை மாநில மதுப்புட்டிகளை கடத்திய சகோதரிகள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:03 am IST

சீா்காழியில் அரசுப் பேருந்தில் புதுவை மாநில மதுப்புட்டிகளை கடத்திய சகோதரிகள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுவை மாநிலம், காரைக்காலில் இருந்து சீா்காழிக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக சீா்காழி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சீா்காழி காவல்ஆய்வாளா் கமல்ராஜ், உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் சீா்காழி பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் வழியாக சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய மூன்று பெண் பயணிகளை போலீஸாா் சோதனை செய்தனா். அவா்கள் கொண்டு வந்த கட்டைப் பையில் புதுவை மாநில மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

சகோதரிகளான அவா்கள் சீா்காழி திருக்கோலக்கா தெருவை சோ்ந்த மு. கவிதா (30), பழையாறு சுனாமி நகா் ர. சுகன்யா ( 32 ), இருவக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த வி. வேம்பு (25) என்பதும், காரைக்காலில் இருந்து புதுவை மாநில 180 மில்லி அளவு கொண்ட மதுபான பாட்டில்களை விற்பனைக்காகக் கொண்டு செல்வதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 400 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.