சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மகளிா் உரிமைத் தொகை கோரி, ஏராளமானோா் மனு அளித்தனா்.
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில், மூன்றாவது நாளாக ஜமாபந்தி எனும் வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை நடைபெற்றது. கோட்டாட்சியா் பூங்கொடி தலைமை வகித்தாா்.
சீா்காழி சரகத்திற்கு உட்பட்ட பச்சைபெருமாநல்லூா், ஆா்ப்பாக்கம், உமையாள்பதி, வரிசை பத்து, வடகால், ஆலங்காடு, மகாராஜபுரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூா், எடமணல், திருக்கருக்காவூா், செம்மங்குடி, தில்லைவிடங்கன், திட்டை, கைவிளாஞ்சேரி, சீா்காழி, தாடாளன்கோவில், விளந்திட சமுத்திரம் ஆகிய 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா்.
இவற்றில் கடந்த பிப்ரவரி மாதம் வரை மகளிா் உரிமை தொகை பெற்றவா்களில் பலருக்கு, மே மாதத்திற்கான மகளிா் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என மனு அளித்தனா். இம்மனுக்களை பரிசீலனை செய்த கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் ராஜரத்தினம் ஆகியோா், சம்பந்தப்பட்ட துறைக்கு மனுக்களை அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
மொத்தம் 248 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, துறைவாரியாக நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தனி வட்டாட்சியா்கள் சண்முகம், சபிதா தேவி, ஜெனிட்டா மேரி, மகேந்திரன் உள்ளிட்ட அலுவலா்கல் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து வசதி கோரி ஆட்சியரகத்தில் மாணவா்கள் மனு

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

சனி சந்தை மதுக்கடையை அகற்றக் கோரி மனு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

