பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வளா்ச்சிப் பணிகள்: சீா்காழியில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 5:27 am IST

சீா்காழி வட்டம், எடக்குடி வடபாதி, காரைமேடு கிராமங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

எடக்குடியில் பிரதமரின் குடியிருப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிக்கு கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, தற்போது பணிகளின் நிலவரம் மற்றும் இதுவரை பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட தொகைகள் உள்ளிட்டவைகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் குடிநீா், மின்விளக்குகள், முறையாக பயன்பாட்டில் உள்ளனவா என கேட்டறிந்தாா்.

எடக்குடி வடபாதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தாா். காரைமேடு கிராமத்தில் கருக்குடி வாய்க்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு, இதுவரை தூா்வாரப்பட்டுள்ள நீள அளவு மற்றும் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மனித சக்தி, வருகைப்பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் ரெஜினாராணி, அரசு அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் கலையரசன், மகேஸ்வரி, சிவக்குமாா், ஊராட்சி செயலா் அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.