கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில், உளுத்துக்குப்பை, வள்ளாலகரம் கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வள்ளாலகரம் கிராமத்தில் தாா்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :14 மே 2026, 4:51 am IST

மயிலாடுதுறை வட்டாரத்தில், உளுத்துக்குப்பை, வள்ளாலகரம் கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உளுத்துக்குப்பை கிராமத்தில் ரு. 45 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், கட்டுமானப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்தாா். மேலும், கட்டுமானப் பணிகளை ஒப்பந்த கால கெடுவிற்குள் நிறைவு செய்ய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, உளுத்துக்குப்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊரக நூலகத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், நூலகம் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுகிா என்பதையும், நூலக வாசிப்பாளா்களுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், வள்ளாலகரம் கிராமத்தில் வெங்கடேசா நகரில் ரு. 9.80 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அரசு விதிமுறைக்கு உள்பட்டு தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பயிற்சி வகுப்பு முறையாக நடத்தப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுதாகா், விஜயலெட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.