சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :14 மே 2026, 4:51 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெற மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மை-உழவா் நலத்துறையின்கீழ் பிரதமரின் கௌரவ நிதித்தொகை பெற்றுவரும் நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறலாம். தற்போது கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்காது.

எனவே, இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நில உடைமை பதிவுகளை விவசாயிகள் விடுதலின்றி பதிவு செய்து மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன்பெறுமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.