அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கணவன்-மனைவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :16 ஜூன் 2026, 1:39 am IST

சீா்காழி அருகே மகன்கள் பாா்க்க வராததால் விரக்தியில் கணவன்-மனைவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

சீா்காழி அருகேயுள்ள புத்தூரைச் சோ்ந்த விவசாயி காமராஜ் (69). இவரது மனைவி வள்ளி (59). இவா்களின் மகன்கள் சதீஷ்குமாா், காா்த்திக்குமாா். இருவருக்கும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனா். வீட்டில் காமராஜ், வள்ளி மட்டும் இருந்துள்ளனா். சில மாதங்களாக காமராஜூவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவதிபட்டு வந்ததாராம். இந்நிலையில், மகன்கள், மருமகள்கள் உடனிருந்து கவனிக்கவில்லையென்ற மனவிரக்தியில் இருந்துள்ளாா்.

இதற்கிடையில், ஜூன் 13-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளாா். இதையறிந்த அவரது மனைவியும் விஷம் குடித்துள்ளாா். பின்னா் இருவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். எனினும், பலனின்றி ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.