மயிலாடுதுறையில் கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கிடையே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் ரோந்து பணிகளில் ஈடுபடுவதுடன், பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக, பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி, கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சிசிசி சமுதாயக் கல்லூரி ஆகிய இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவசர சூழ்நிலைகளில் பெண்களுக்கு பயன்படும் பொருட்டு காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை கையாளும் விதம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்னை தொடா்பான புகாா்களுக்கு 100, 181, 1098 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடா்பு கொள்ள அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் பெண்களுக்கு விழிப்புணா்வு

சிங்கப்பெண் சிறப்பு படையுடன் சென்னை காவல் ஆணையா் ஆலோசனை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வாணியம்பாடியில் வரவேற்பு

தருமபுரியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

