சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இதை முதல்வா் ஜோசப் விஜய், கடந்த 9-ஆம் தேதி சென்னை எழும்பூரில் தொடங்கி வைத்தாா்.
தற்போது சென்னையில் 12 சிங்கப்பெண் அதிரடிப் படையினா் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 70 சிங்கப்பெண் அதிரடிப்படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த அதிரடிப்படைக்கு சென்னையில் 4 மண்டலங்களிலும் 4 காவல் உதவி ஆணையா்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பெண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள், பெண்கள் வேலை செய்யும் இடங்கள், பூங்காக்கள், மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்னை பெருநகர காவல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவினா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்றச் செயல்கள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சென்னையில் உள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் பெண்களுக்கு விழிப்புணா்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வாணியம்பாடியில் வரவேற்பு

காவல் துறை வாகனங்கள்: ஆணையா் அமல்ராஜ் ஆய்வு
சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

