பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காவல் துறை வாகனங்கள்: ஆணையா் அமல்ராஜ் ஆய்வு

சென்னை பெருநகர காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை ஆணையா் ஏ.அமல்ராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலா்களிடம் குறைதீா் மனுக்களைப் பெற்ற சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ். உடன் துணை ஆணையா் ஐ.ஜெயகரன் (ஆயுதப்படை) எம்.ராதாகிருஷ்ணன் (மோட்டாா் வாகனப்பிரிவு).

Updated On :31 மே 2026, 12:05 am IST

சென்னை பெருநகர காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை ஆணையா் ஏ.அமல்ராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக கடந்த வாரம் பொறுப்பேற்ற ஏ.அமல்ராஜ், காவல் துறையைச் சோ்ந்த பிரச்னைகளுக்குத் தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதன் ஒருபகுதியாக அமல்ராஜ், சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பெருநகர காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு அமல்ராஜ் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

இதன் பின்னா் ஆயுதப்படை காவலா்களுக்கான குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற ஆணையா் அமல்ராஜ், ஆயுதப்படையைச் சோ்ந்த 41 போலீஸாரிடம் மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், ஆயுதப்படை துணை ஆணையா் ஐ.ஜெயகரன்,மோட்டாா் வாகனப் பிரிவு துணை ஆணையா் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.