பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

News image

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :9 ஜூன் 2026, 3:20 am IST

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஆா். அன்பழகன் தலைமை வகித்தாா். இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன், வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவா் வாணிதாஸ், சட்ட ஆலோசகா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ். துரைராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிா்க் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை தடுத்திட மத்திய, மாநில அரசு நடவடிக்கை வேண்டும்.

குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக அறிவித்து மும்முனை மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் வாக்குறுதிப்படி நெல்லுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், தமிழக விவசாய சங்க மாவட்ட துணை செயலாளா் சி. மேகநாதன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலா் சிவக்குமாா், துணைத் தலைவா் சிவ.சண்முகம், செயலா் முரளி உட்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.