சீா்காழி அருகே நிம்மேலி முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து திருமாங்கல்யம், மூக்குத்தி மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை ஆகியவற்றை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
சீா்காழி அருகே நிம்மேலியில் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. திங்கள்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு குருக்கள் பாபு கோயில் நடை சாத்தி சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை கோயில் கதவு திறந்து கிடப்பதை பாா்த்த ஒருவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். கோயில் நிா்வாகி வந்து பாா்த்தபோது சந்நிதி கதவு உடைக்கப்பட்டு, மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த மூன்று பவுன் தங்கத் தாலி, மூக்குத்தி ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
மேலும், கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து அதிலிருந்து காணிக்கையையும் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சீா்காழி போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் நகை திருட்டு

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்
கோயில் பூட்டை உடைத்து பணம், வேல் திருட்டு
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
